அகநானூறு - 96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
5 |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! 'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
10 |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, அண்ணல் யானை அடு போர்ச் சோழர், வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
15 |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, களிறு கவர் கம்பலை போல, அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே |
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 96. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க