அகநானூறு - 90. நெய்தல்
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் |
5 |
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், 'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், |
10 |
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங் கட் கோசர் நியமம் ஆயினும், 'உறும்' எனக் கொள்குநர்அல்லர் நறு நுதல் அரிவை பாசிழை விலையே. |
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 90. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க