அகநானூறு - 84. முல்லை
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் |
5 |
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, |
10 |
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, |
15 |
வினைவயின் பெயர்க்கும் தானை, புனைதார், வேந்தன் பாசறையேமே! |
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 84. முல்லை , முல்லை, இலக்கியங்கள், அகநானூறு, மலர், வாங்கி, சங்க, எட்டுத்தொகை