அகநானூறு - 75 . பாலை
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, |
5 |
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், |
10 |
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் |
15 |
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி |
20 |
ஆனா நோயை ஆக, யானே பிரியச் சூழ்தலும் உண்டோ, அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?' |
'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 75 . பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, இயல், எட்டுத்தொகை, சங்க