அகநானூறு - 41. பாலை
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, |
5 |
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப, கோழிணர் எதிரிய மரத்த, கவினி, காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், |
10 |
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அம் கலுழ் மாமை கிளைஇய, |
15 |
நுண் பல் தித்தி, மாஅயோளே? |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 41. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, பரப்ப, எட்டுத்தொகை, சங்க