அகநானூறு - 40. நெய்தல்
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி குவை இரும் புன்னைக் குடம்பை சேர, அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
5 |
தாழை தளரத் தூக்கி, மாலை அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனைய, துயரம் செய்து நம் அருளார் ஆயினும் அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
10 |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, வாரற்கதில்ல தோழி! கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
15 |
அகமடல் சேக்கும் துறைவன் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 40. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க