அகநானூறு - 396. மருதம்
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், 'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன் இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
5 |
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
10 |
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
15 |
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 396. மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், நின், சொல்லியது, சங்க, எட்டுத்தொகை, தாக்கி