அகநானூறு - 347. பாலை
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் நலம் கவர் பசலை நல்கின்று நலிய, சால் பெருந் தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, |
5 |
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, |
10 |
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி கை தலை வைத்த மையல் விதுப்பொடு, கெடு மகப் பெண்டிரின் தேரும் |
15 |
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 347. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க