அகநானூறு - 317. பாலை
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
5 |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
10 |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் ஆன் ஏமுற்ற காமர் வேனில், வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
15 |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப வருவேம்" என்ற பருவம் ஆண்டை இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
20 |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து என்னுழியதுகொல் தானே பல் நாள் அன்னையும் அறிவுற அணங்கி, நல் நுதல் பாஅய பசலை நோயே? |
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 317. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க