அகநானூறு - 29. பாலை
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள், கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின் வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப, செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று |
5 |
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் |
10 |
தாழக் கூறிய தகைசால் நல் மொழி மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, |
15 |
கொம்மை வாடிய இயவுள் யானை நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி, அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு |
20 |
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை, மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! |
25 |
வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 29. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நின், கெழு, நீர், மருங்கு, மாண், சிறந்த, எட்டுத்தொகை, சங்க, வினை, தண்டா