அகநானூறு - 287. பாலை
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
5 |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
10 |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, அரம்பு வந்து அலைக்கும் மாலை, நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 287. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நிலை, எட்டுத்தொகை, சங்க