அகநானூறு - 231. பாலை
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, நல் இசை வலித்த நாணுடை மனத்தர் கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், |
5 |
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக வருவர் வாழி, தோழி! பொருவர் |
10 |
செல் சமம் கடந்த செல்லா நல் இசை, விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன் பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் ஆடு வண்டு அரற்றும் முச்சித் தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. |
15 |
தலைமகள் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 231. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க