அகநானூறு - 225. பாலை
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, இன்றே இவணம் ஆகி, நாளை, புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
5 |
அகலா அம் துளை, கோடை முகத்தலின், நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
10 |
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
15 |
செறி தொடி முன்கை, நம் காதலி அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 225. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, துளை, எட்டுத்தொகை, சங்க