அகநானூறு - 220. நெய்தல்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
5 |
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் காணலாகா மாண் எழில் ஆகம் உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
10 |
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
15 |
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, யாணர்த் தண் பணை உறும் என, கானல் ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
20 |
நல் எழில் சிதையா ஏமம் சொல் இனித் தெய்ய, யாம் தௌயுமாறே. |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 220. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எழில், எட்டுத்தொகை, சங்க