அகநானூறு - 200. நெய்தல்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை, ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து, இன்னா உறையுட்டுஆயினும், இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள், |
5 |
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப! பொம்மற் படு திரை கம்மென உடைதரும் மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி, எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, |
10 |
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும் எம் வரை அளவையின் பெட்குவம்; நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே. |
தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 200. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, நாள், எட்டுத்தொகை, சங்க