அகநானூறு - 189. பாலை
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, விசும்பு கண் அழிய, வேனில் நீடி, கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
5 |
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, திதலை அல்குல் குறுமகள் அவனொடு சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
10 |
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் நன்னராளர் கூடு கொள் இன் இயம் தேர் ஊர் தெருவில் ததும்பும் ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
15 |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 189. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, படர், எட்டுத்தொகை, சங்க