அகநானூறு - 175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் |
5 |
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து வருதும்' என்றனர் அன்றே தோழி! கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் |
10 |
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், |
15 |
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு மண் பயம் பூப்பப் பாஅய், தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே? |
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 175. பாலை , இலக்கியங்கள், பாலை, தலைமகள், அகநானூறு, தோழிக்குத், சங்க, எட்டுத்தொகை, பிரிவின்கண்