அகநானூறு - 166. மருதம்
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், நறு விரை தௌத்த நாறுஇணர் மாலை, |
5 |
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் அனையேன்ஆயின், அணங்குக, என்!' என மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், |
10 |
யார்கொல் வாழி, தோழி! நெருநல் தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, புதுவது வந்த காவிரிக் கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? |
15 |
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 166. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க