அகநானூறு - 146. மருதம்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், |
5 |
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை யார்கொல் அளியள்தானே எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் |
10 |
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? |
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 146. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, வாயில், எட்டுத்தொகை, சங்க