அகநானூறு - 102. குறிஞ்சி
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி |
5 |
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட; குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, |
10 |
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், காவலர் அறிதல் ஓம்பி, பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! |
15 |
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 102. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க