ஐங்குறுநூறு - 44. புறவணிப் பத்து
நன்றே காதலர் சென்ற ஆறே அணிநிற இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே. | 431 |
நன்றே காதலர் சென்ற ஆறே சுடுபொன் அன்ன கொன்றை சூடிக் கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே | 432 |
நன்றே காதலர் சென்ற ஆறே நீர்ப்பட எழிலி வீசும் கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. | 433 |
நன்றே காதலர் சென்ற ஆறே மறியுடை மாண்பிணை உகளத் தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. | 434 |
நன்றே காதலர் சென்ற ஆறே நிலன் அணி நெய்தல் மலரப் பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. | 435 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 44. புறவணிப் பத்து, நன்றே, காதலர், சென்ற, உடைத்தே, இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, புறவணிப், சங்க, எட்டுத்தொகை