வேனிற் காதை - சிலப்பதிகாரம்
6.கோவலன் கடிதத்தை மறுத்தல்
திலகமும் அளகமுஞ் சிறுகருஞ் சிலையுங் குவுளையுங் குமிழுங் கொவ்வையுங் கொண்ட |
75 |
மாதர்வாண் முகத்து மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும் புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயலுலாய்த் திரிதருங் காமர் செவ்வியிற் பாகுபொதி பவளந் திறந்துநிலா உதவிய |
80 |
நாகிள முத்தின் நகைநலங் காட்டி வருகென வந்து போகெனப் போகிய கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும் அந்தி மாலை வந்ததற் கிரங்கிச் சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக் |
85 |
கிளிபுரை கிளவியும் மடவன நடையுங் களிமயிற் சாயலுங் கரந்தன ளாகிச் செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து ஒருதனி வந்த உள்வரி யாடலும் சிலம்புவாய் புலம்பவும் மேகலை யார்ப்பவுங் |
90 |
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும் புறத்துநின் றாடிய புன்புற வரியும் கோதையுங் குழலுந் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமுந் திருமுலைத் தடமும் |
95 |
மின்னிடை வருத்த நன்னுதல் தோன்றிச் சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப் புணர்ச்சியுட் பொதிந்த கலாந்தரு கிளவியின் இருபுற மொழிப்பொருள் கேட்டன ளாகித் தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் |
100 |
கிளர்ந்துவே றாகிய கிளர்வரிக் கோலமும் பிரிந்துறை காலத்துப் பரிந்தன ளாகி என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம் தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி யன்றியும் வண்டலர் கோதை மாலையுள் மயங்கிக் |
105 |
கண்டவர்க் குரைத்த காட்சி வரியும் அடுத்தடுத் தவர்முன் மயங்கிய மயக்கம் எடுத்தவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடுபெற் றனவப் பைந்தொடி தனக்கென |
110 |
(கண்கூடு வரி)
நெற்றியில் திலகத்தையும்,அதன் மேல் கூந்தலையும்,புருவம் எனச் சிறிய கரிய வில்லையும்,கண்கள் எனக் குவளை மலரையும்,மூக்கு எனக் குமிழ் மலரையும்,வாய் எனக் கொவ்வைக் கனியையும் கொண்டவள் மாதவி.அவள் தன் அழகிய ஒளிவீசும் முகத்திலே என் மேல் காதல் கொண்டவள் போல் வலிய எண்ணத்தோடு,என் முன்னே அன்றொரு நாள் தோன்றி நடித்தாள்.அதுதான் அவள் நடித்த ‘கண்கூடு வரி’.
(காண் வரி)
கூந்தல் என மேகத்தைச் சுமந்து,அதன் சுமையால் வருந்திய நிலா போன்ற முகத்தில்,கண்கள் எனக் கயல்மீன்கள் உலாவித் திரிகின்ற தன் அழகை வெளிப்படுத்தி,தேன் செறிந்த தன் பவள வாயைத் திறந்து,ஒளியைத் தருகின்ற இள முத்தினைப் போன்ற தன் புன்னகையைக் காட்டி,நான் ‘வா’ என்றழைத்தால் வந்து,‘போ’ என்று சொன்னபோது சென்ற,அந்தக் கரிய நீண்டக் கண்களை உடையவளின் ‘காண் வரி’ என்னும் நடிப்பினையும் கண்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]