பாடல் 98 - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற கோள்களது மாரிநிற்க |
நவகோள்களில் இராகு கேது நீங்கலாக ஏனையவை தங்களுக்குள் இடம் மாறி (பரிவர்த்தனை) நிற்க, அச்சாதகனுக்கு பூமியில் பேரும் புகழும் மிகும். வெகுதனமும் உடையவனேயாவான். உடல் நாதனான சந்திரனுடன் பாம்பு கூடினும் உத்தமனாகவும், யோக்கியனாகவும், புனிதத் தன்மையுடையவனாகவும் அச்செல்வன் இந்நிலவுலகில் வாழ்ந்திருப்பான். அவனுக்கு எமபயம் இல்லவே இல்லை. இதனை ஏனைய கிரக நிலவரங்களையும் நன்கறிந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 98 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், உடல், astrology