பாடல் 78 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா மகரமுதல் நண்டுக்குள்ளேபகருகின்ற பானுமைந்தன் அதிலேதோன்றசீரப்பா செழுமதியும் கேந்திரமேறசிவசிவாயென்ன சொல்வேன் அரசன் சென்மம்ஆரப்பா அகிலங்க ளெல்லாமாறாம்அப்பனே அரசனுடன் கொடியைப் பார்த்துநாரப்பா நகைக்குதடா சீமான்சோலைநன்றாக புலிப்பாணி நவின்றிட்டேனே. |
இன்னுமொன்றும் அறிவாயாக. மகரம் முதல் கடகம் வரையுள்ள இராசிகளுக்கு பரிதி மைந்தனான சனி பகவான் ஏதேனும் ஒரு ராசியில் நிற்க அவனுக்குக் கேந்திரத்தில் செழுமைமிகு மதியும் கேந்திரம் பெற, சிவ பரம்பொருளின் கருணை பலத்தினை என்னவென்று சொல்வேன்! அச்சென்மனை அரசனென்றும் அகிலங்களை யெல்லாம் கட்டி ஆளத் தக்கவன் என்றும் அவ்வரசனுடைய பதாகை தன்னைப்பார்த்து புன்னகை கொள்ளும் பூமலர்ச் சோலைகள் எல்லாம் என போகமாமுனிவரின் அருள் பெற்ற புலிப்பாணி இயம்பினேன்.இது
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 78 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சொல்வேன், astrology