பாடல் 62 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆமென்ற செவ்வாயும் ராகுமாந்திஅப்பனே ரெண்டோனைக் கூடிநிற்கில்போமென்ற பூதலத்தில் பரமன்பூசைபுகழ்பெரிய அய்யனோடு ருத்திரன் ருத்திரிஓமென்ரே ஓங்காளி வீரபத்திரன்ஓதிடுவன் ஆகாச மாடந்தானும்தாமென்ற போகருட கடாட்சத்தாலேதப்பாமல் செய்திடுவன் சென்மந்தானே |
இன்னுமொன்று கூறுகிறேன் கேட்பாயாக! செவ்வாயும் ராகுவும் மாந்தியுடன் இலக்கினத்திற்கு இரண்டிற்குரியவனைக் கூடி நிற்பின் அச்சென்மன் இப்பூதலத்தில் சிவ பூஜையும், பெரிய புகழ் உடைய ஐயனார். மற்றும் உருத்திரன், உருத்திரி, ஓங்கார வடிவினளாம் காளி மற்றும் வீரபத்திரன் மற்றும் ஆகாசமாடன் ஆகியோருடைய பூஜைகளையும் செய்யும் தேவதை வசியன் என்று போகருடைய கருணையாலே புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 62 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், செவ்வாயும், astrology