பாடல் 61 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா இரு ஐந்தில் புந்திநிற்க |
மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தில் புதன் நிற்க எல்லாராலும், புகழ்ப்படும் குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்க அதே நேரத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியார் எட்டில் நிற்க அப்பனே! மீனத்தில் சூரியகுமாரனான சனியும், தனுசில் செவ்வாயும் நிற்கவும், பிற இடங்களில் வேறு கிரகங்கள் நிற்கவும் பிறந்த குமாரனைப் பிறர் கண்டும் காணார் என்றும் இந்நிலவுலகத்தில் தேவன் அவனே என்றும் போகமா முனிவரின் கருணாகடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 61 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, நிற்க, பாடல், நிற்கவும், என்றும், astrology, மீனத்தில்