பாடல் 53 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா திரராசி செனித்தபேர்க்கு |
ஸ்திர ராசியில் தோன்றிய ஐன்மனுக்கு நன்மை செய்யும் பாக்கியாதிபதியான 9க்குடையவனும் தீமையே செய்வான். ஆனால் இப்பாக்கியாதிபதி திரிகோணமான (1,5,9 ஆகிய) பாவங்களில் நிற்பின் அரசனால் இலாபம் போன்ற நற்பலன்களை அளிப்பார். மற்ற இடங்களில் நின்றால் வெகுவான பயமே ஏற்படும். நற்பலன்கள் ஏற்படுவதில்லை. செய்கின்ற காரியத்தில் தொழிலில் விக்கினங்கள் உண்டாகும். சிறப்புமிக்க போக மகாமுனிவரான என் குருநாதர் அருளாணையால் புலிப்பாணியாகிய நான் இப்பலனைக் கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 53 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology