பாடல் 246 - சனி மகாதிசை,சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற காரிதிசை கதிரோன்புத்தி |
இனி இச்சனி திசையில் கதிரவனாகிய சூரியனது பொசிப்புக்காலம் 11 மாதம் 12 நாள்களாகும். இந்தக் கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: தேகத்தில் சுர உபாதை காணுதலும் ரத்த சம்பந்தமான நோயும் வயிறுபாதையால் வாடச் செய்யும். சூலை நோயும் உடன் காணும். அதுமட்டுமல்லாமல் மனம் விரும்பும் மனைவிக்கும் மக்களுக்கும் நோயுபாதை ஏற்பட்டு வெகு வருத்தத்தை நல்கும் என்பதை உணர்க என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.
இப்பாடலில் சனி மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 246 - சனி மகாதிசை,சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சூரிய, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, நோயும், astrology