பாடல் 245 - சனி மகாதிசை,சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாளில்லா காரிதிசை சுக்கிரபுத்தி |
மேலும் இக்காரியென்னும் சனிபகவானின் திசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக்காலம் 3 வருடம் 3 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் பெண்களால் மனமகிழ்வு உண்டாகும். இப்புத்தி வந்த நாள் தொட்டு வெகுவான தனப்ராப்ட்தி யோகம் உண்டாகும். எப்பொழுதும் அரசரோடு இணங்கி தினம்தோறும் மகிழ்வுடன் இச்சாதகன் வாழ்வதோடு வரும் பொருள் உரைக்கும் மந்திரிமார்களோடு அவருக்குச் சமமான அணியலங்காரங்களும் ஏற்படும். கோள் சொல்லிக் கொள்ளி வைக்கும் பலவாகிய பகைவர்களும் இல்லாதொழிவர். பொன் மகள் என்னும் இலக்குமி தேவி இச்செல்வ நலங்களைத் தருவாள் என போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சனி மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 245 - சனி மகாதிசை,சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சுக்கிர, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, உண்டாகும், astrology