பாடல் 226 - இராகு மகாதிசை, சனி புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற ராகுதிசை சனிபுத்திகேளு |
இராகு மகாதிசையில் சனிபுத்தியின் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகன் நன்மை இல்லாதவனாகப் பிரமை பிடித்தவனைப் போல் பலதேசமும் சென்று திரிவான். பூர்வபுண்ய வசத்தால் பிதுர்களினால் பீடை ஏற்படும். கொடிபோலும் இடை யுடைய மனைவிக்கு நோய் உண்டாதலும் குழந்தை மரணமும் உண்டாகும். குலதெய்வத்தால் இடைஞ்சல் ஏற்படும். பலவகையில் விரயங்கள் ஏற்படும். சத்துருக்களின் தொகைமிகுவதே போல வெகு தனலாபமும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 226 - இராகு மகாதிசை, சனி புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இராகு, ஏற்படும், புத்திப், மகாதிசை, பாடல், பலன்கள், மகாதிசையில், பிரமை, astrology