பாடல் 225 - இராகு மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
கூடியே ராகுதிசை வியாழபுத்தி |
இவ்விராகு திசையில் வியாழ புத்திற்குரிய காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்காலத்தில் இச்சாதகனுக்கு அரசரால் நன்மையுண்டாகும். பெண்களால் சுபசோபனங்கள் ஏற்படுதலும் புத்திரோற்பத்தியும் ஏற்படும். அதனால் மனத்தில் தெம்பும் மகிழ்ச்சியும் மிகுந்து காணும். பலவிதமான பாக்கியங்கள் ஏற்படுவதோடு சமுதாயத்தில் அந்தஸ்து மிகுதலும், வெகுதனம் வாய்த்தலும் பூமி லாபமும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 225 - இராகு மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, வியாழன், இராகு, பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, astrology