பாடல் 208 - சந்திர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா சந்திரதிசை ராகுபுத்தி |
இதற்கு மேல் நான் ஒன்றையும் உனக்குச் சொல்வேன். அதையும் நீ கவனமாகக் கேட்பாயாக! சந்திர மகாதிசையில் ராகுபுத்தி பகையானதேயாகும். இச்சந்திர மகாதிசையில் ராகுவின் பொசிப்புக் காலம் பகையான தென்றாலும் நீண்ட 18 மாதங்களைக் கொண்டதாகும். இக்கால கட்டத்தில் இதற்கு ஏற்படும் சோதனையான பலன்களை நீ விவரமாகக் கேட்பாயாக! எதற்கும் அடங்காத இவர்களது சத்துருவால் இவர்களுக்கு தனநஷ்டம் ஏற்படும் என்பதையும் அறிந்து கொள்க. பல விதமான வியாதிகளும் ஏற்படும், காலம் எல்லாம் விதியானது உள்ளளவும் மந்தம் உடையதும் மத்திமமான புத்தியுள்ளதும் நாசம் செய்வதுமாக அமையும். மேலும் களத்திலுள்ள விவசாயிகளுடன் கன்று காலிகளும் மடிதல் நேரும். தங்க ஆபரணங்கள் செலவாதலும் உண்டாகும் என உணர்ந்து கிரகபலம் தன்னையும் அறிந்து கூறுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சந்திர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 208 - சந்திர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சந்திர, புலிப்பாணி, இராகு, மகாதிசை, ஏற்படும், பாடல், புத்திப், மகாதிசையில், பலன்கள், காலம், அறிந்து, astrology, சத்துருவால், இதற்கு, கேட்பாயாக