பாடல் 207 - சந்திர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற சந்திர திசை செவ்வாய்புத்தி |
அடுத்து, சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தி ஏழு மாதங்களாகும். இவை அசுபபலன் தருபவையே. அவையாவன: வாதநோய், பித்தத்தால் ஏற்படும் வாந்திபேதி, மற்றும் வாயுவால் ஏற்படும் வியாதிகளை உண்டு பண்ணும். வெகுபலவான கள்ளர்களின் கோபத்திற்கு உள்ளாகச் செய்யும். இச்சைக்குகந்த பெண்களால் வெகு துக்கத்தை ஏற்படுத்தலும், வெகு பலமான அப்பெண்களாலும் அவர்களது சகோதரர்களாலும் கொடுமைகள் உண்டு. எனினும் தீர்க்கமாய் ஆராய்ந்து பலன் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 207 - சந்திர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சந்திர, செவ்வாய், புலிப்பாணி, புத்திப், மகாதிசை, பாடல், பலன்கள், வெகு, உண்டு, astrology, மகாதிசையில், ஏற்படும்