பாடல் 204 - சூரிய மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆமென்ற ரவிதிசையில் கேதுபுத்தி |
இன்னுமொன்று இந்த இரவியின் திசையில் செம்பாம்பு என்று கூறப்படும் கேதுபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பொல்லாத நாள்களேயாகும். அதுவும் 125 நாள்களேயாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: காரியக்கேடு ஏற்படும். மனைவி நாசத்தை ஏற்படுத்தும். கேடு செய்யும் சத்துருக்களிடம் சென்று சரணடையச் செய்யும். இருந்தமனை ஊர்விட்டு ஓடிவிடச் செய்யும். பூமியில் பலவிதமான தெண்டங்களை அடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 204 - சூரிய மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, கேது, செய்யும், சூரிய, பலன்கள், பாடல், புத்திப், மகாதிசை, astrology, நாள்களேயாகும்