பாடல் 203 - சூரிய மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற ரவிதிசையில் புதனார் புத்தி |
தானென்று கூறத்தகும் சூரிய மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பாதகமானதே. இது பத்து மாதம் ஆறு நாள்கள் நிகழும். இக்கால கட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: தீராத வியாதி வந்து தேக நலத்தைக் கெடுக்கும் வானளாவிய சிறந்த செல்வமும் பொருளும் சேதம் அடையும். இதுவரை நன்மைகளையே அளித்து வந்த புத்தியானது நாசமாகும். அரசனைப் போல் வாழ்ந்த இச்சாதகனின் குடும்பத்தை நாசமடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 203 - சூரிய மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சூரிய, புதன், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, மகாதிசையில், பத்து, astrology, மாதம்