பாடல் 201 - சூரிய மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
நில்லென்ற ரவிதிசையில் வியாழன்புத்தி |
மேலும் இந்த இரவி திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 288 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன; விவரமுடன் நன்மைதரத் தக்க சம்பத்து ஏற்படின் சில சிறு சுபவிரங்களும் ஏற்பட்டு தனஹானியுண்டாகும். என்சொல் என்றும் தவறாது, தீவினைகள் அகலும். மிகவும் குறைவற்ற இன்பம் ஏற்பட்டு சுக செளக்யத்துடன் வாழும் நிலை ஏற்படும். இதுவரை ஏற்பட்டிருந்த சத்துருக்களும் இச்சாதகனை வணங்கி மித்துருவாகிச் சுகிப்பன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 201 - சூரிய மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, வியாழன், சூரிய, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, ஏற்பட்டு, ஏற்படும், astrology, தவறாது