பாடல் 200 - சூரிய மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆமென்ற ரவிதிசையில் ராகுபுத்தி |
இன்னும் இச்சூரிய மகாதிசையில் கரும்பாம்பு எனக் கூறப்படும் இராகுவின் பொசிப்புக் காலம் மிக ஆகாத தொன்றேயாகும். இவனது பொசிப்புக் காலம் பத்து மாதம் இருபத்தி நான்கு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: பொன் பொருள் சேதமாகும். பெண்நாசமும் உண்டாகும். சத்துருக்களுடன் சண்டையிடுதல் போன்ற தீயன நிகழும். உடல் நலத்தைப் பீடிக்கும். கொடிய வியாதிகள் வந்தடையும், மனைவி மக்களைப் பிரிந்து வாழச் செய்யும். இவனது பொசிப்புக் காலத்தை நலமில்லாத நாள்களே என்று துணிந்து சொல்லுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 200 - சூரிய மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இராகு, சூரிய, புத்திப், பொசிப்புக், மகாதிசை, பாடல், பலன்கள், காலம், இவனது, astrology, பத்து, மகாதிசையில்