பாடல் 196 - புலிப்பாணி ஜோதிடம் 300
இணங்கினே னின்னமொன்று யியம்பக்கேளுஇரவிமுத லொன்பதுகோள் திசையில் தானும்சுணங்கினேன் சுயபுத்தியில் பலனைத்தாரார்சுகமளிப்பார் இருநால்வர் பேர்களுந்தான்அணங்கினேன் அவரவர்கள் சமயங்கூற்ந்துஅப்பனே சுவாமியிட செயலைப்பாருகுணங்கினேன் போகருட கடாட்சத்தாலேகுற்றமிலை புலிப்பாணி கூறினேனே. |
மேலும் ஒன்றைக் கூறுவேன் கேட்பாயாக! சூரியன் முதலான நவகோள்களும் தங்களது தசை நடைபெறும் காலத்தில் சுயபுத்தியில் பலனைத்தாரார். ஏனைய எண்மரும் சுகமளிப்பர். இதனை அவர்கள் நின்ற நிலை ஆதிபத்திய பலம் முதலியவற்றை ஆய்ந்தறிந்து கூற வேண்டும் என போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 196 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சுயபுத்தியில், astrology