பாடல் 194 - புலிப்பாணி ஜோதிடம் 300
சூடப்பா இன்னமொரு சூச்சமங்கேளூசுகமுள்ள ஜென்மனுட ராசிதன்னில்மாடப்பா மதிமயங்கி ஒளிவில்லாமல்மகத்தான கோள துதா னீசமோகூடப்பா குடினாத னம்புலிக்குகொற்றவனே கேந்திரமு முச்சமாகநாடப்பா போகருட கடாட்சத்தாலேநலமாக செப்பிடுவாய் நீசம்போச்சே. |
வேறொரு சூச்சுமத்தையும் உனக்கு உணர்த்துகிறேன் தெளிவாகக் கேட்பாயாக! நற்சுகம் உடைய சாதகனின் ஜென்மராசி தன்னில் சந்திரன் முதலிய கிரகங்கள் மயங்கி நீச்சமே அடைந்திருப்பினும் இலக்கினாதிபதிபன் சந்திர கேந்திரமோ உச்சமோ அடைந்திருப்பின் இதனால் ஏற்படும் யோகம் நீசபங்க ராஜயோகம் என நிகழ்த்துக என்ற போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 194 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology