பாடல் 189 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா பரமகுரு ஆறிலேற |
பிரசித்திபெற்ற குருபவான் கோட்சாரத்தில் ஆறாம் இடத்தை அடைந்த காரணத்தால் தான் சிவபரம் பொருளின் பேரருளால், தேவர்கள் கொடுமையால் பலம் மிகுந்தவரான மகாபலிச் சக்கரவர்த்தி சிறைக்கூடம் சென்றதனை நினைவினில் கொள்க. அரசபயமும், கலகமும், பலவகைத் துன்பங்களும், இல்லத்தில் களவு போதலும் மனத்தில் குழப்பமும் பயமும் ஏற்படுவதோடு விஷபயமும் உண்டு என்று குரு நின்ற பதியினை அறிந்து அதாவது கிரக நிலவரங்களை ஆராய்ந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 189 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், நின்ற, தேவர்கள், astrology, சிறைக்கூடம்