பாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொரு புதுமைகேளுபால்மதியும் பரமகுரு யேழில் நிற்கசீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லைசெந்திருமால் தேவியுமோ விலகி நிற்பாள்கூறப்பா குமரியவளில்லாமல்தான்குமரனுட வங்கிஷமும் நாசமாச்சுஆரப்பா அயன்விதியை கூறலுற்றேன்அப்பனே புலிப்பாணி பாடினேனே |
இன்னுமொரு புதுமையையும் நீ கேட்பாயாக! எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும்? இதனையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology