பாடல் 115 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொன்று பகரக்கேளு |
நான் கூறுகின்ற இன்னொரு கருத்தையும் நீ ஆழ்ந்து காண்க. தேவகுருவும் சந்திரனும் அசுரகுருவும் ஆகிய மூவரும் இலக்கினத்திற்கு ஐந்தில் நிற்க அச்சாதகன் இந்நிலவுலகில் மிகச் சிறப்புடன் வாழ்பவன் ஆவான்; அதே போல் ஐந்தில் குருதனித்திருக்க புத்திரர்கள் அற்பம் என்றும் சந்திரன் தனித்திருக்க பெண்சந்தானம் என்றும் இப்புவியோர்க்குக் கூறுக, போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 115 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்றும், astrology, ஐந்தில்