பிறந்த எண் 5 - பிறந்த தேதிப் பலன்கள்

புதன் (Mercury)
நிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வு சொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள் ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். வெளிநாடு, வெளியூர் செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்தி சாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம் பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு. காதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும் தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக் காட்டுவார்கள். 5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்து இறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல், ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்றில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச் சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள். ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின் கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல், ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.
இவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும். சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை. எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ் விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத் தொழில்கள் மிக்க நன்மை தரும்.
தொழில்கள்
எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும் (Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை! நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.
இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்! இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது. ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றி அடையலாம்.
உலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.
இவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால் துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது! Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள்! அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம்! ஏதாவது உபதொழில் .. செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். ... விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.
அறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள்! மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.
புதனின் யந்திரம் (சக்கரம்)
9 | 4 | 11 |
10 | 8 | 6 |
5 | 12 | 7 |
புதனின் மந்திரம்
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்! ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம்புதம் பிரணமர்மயஹம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 5 - பிறந்த தேதிப் பலன்கள், இவர்கள், விடுவார்கள், நன்கு, உண்டு, பிறந்த, தரும், வெற்றி, செய்து, வேண்டும், ஜோதிடம், துணிந்து, பணம், இருப்பார்கள், கொண்டே, இவர்களுக்கு, நன்மை, தொழில், எளிதில், தொழிலை, தொழில்கள், பிரகாசிப்பார்கள், அதிகம், இவர்களது, வரும், கொள்வார்கள், போன்றவற்றில், தங்களது, மக்கள், துறை, இருக்கும், அடிக்கடி, பலன்கள், தேதிப், திறமையும், எந்த, வேலை, இறங்கி, நிறைந்தவர்கள், செய்யும், விட்டுவிட்டு, வைத்துக், தொழிலில், இரவில், இறங்கக்கூடாது, கமிஷன், பின்பு, உடையவர்கள், முகவர்களாகவும், business, நடிகைகள், பெறுவார்கள், செய்தி, புதனின், பொதுவாக, செய்தல், நடிகர்கள், துறைகளும், புகுத்தி, அரசியல், பிரதிநிதிகள், அறிவியல், துறைப், கணிதம், கலைத்துறை, விற்பனைப், சம்பாதிப்பார்கள், கொள்ளும், இயல்பினர், ஈடுபடுவார்கள், போன்று, வேகம், போது, செல்லும், மிகுந்த, ஜோதிடம், எண், தான், மற்ற, அனைத்து, நடுவில், உடல், உழைப்பில், சொந்தத், அரசாங்கப், சிறப்புத், ஒத்து, தாங்கள், ஏற்படும், மாற்றிக், ஈடுபட்டு, இவர்களைப், விளங்குவார்கள், வியாபாரிகள், பொருள், பேச்சிலும், சம்பாதிக்கும், வழிமுறைகளையும்