பிறந்த எண் 5 - பிறந்த தேதிப் பலன்கள்
புதன் (Mercury)
ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே!
இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMOND ஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
சாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும் உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும். கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.
நண்பர்கள்
பொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே! குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.
திருமணம்
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
முக்கியக் குறிப்பு
இவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம் தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச் செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வு செய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும், செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும். உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.
நோய்களின் விபரங்கள்
பொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனமே அதிகமாகப் பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும். சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவு ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக் கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில் நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 5 - பிறந்த தேதிப் பலன்கள், பிறந்த, தேதிகளும், இவர்களுக்கு, ஆகிய, அதிர்ஷ்ட, மிகவும், இவர்கள், மற்ற, குறைவு, குழந்தைச், அதிகமாகப், கூட்டு, பலன்கள், தேதிப், எண்களில், ஏற்படும், வரும், ஜோதிடம், தேர்வு, செல்வம், நரம்பு, பாக்கியம், நல்ல, வேண்டும், உடல், கொண்டால், குறைத்துக், மினுமினுக்கும், எண்காரர்கள், இரத்தினம், அனைத்து, ஜோதிடம், எண், எனப்படும், வண்ணங்களும், இவர்களுக்குக், திருமணம், பொதுவாக, கொள்ளவும், குழந்தை