பிறந்த எண் 9 - பிறந்த தேதிப் பலன்கள்

செவ்வாய் (Mars)
ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும், 6, 15, 24 ஆகிய நாட்களும் மிகவும் சிறப்பானவை! எனவே கூட்டு எண்கள் 6 மற்றும் 9 வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும் சாதனமானவையே.
1, 10, 19, 28 மற்றும் எண் 1 வரும் நாட்களும் நடுத்தரமான பலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2 வரும் நாட்களும் துருதிர்ஷ்டமானவை! எந்தச் செயலும் தொடங்கக் கூடாது.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
இவர்களுக்குப் பவழம் (CORAL) மிகவும் ஏற்றது! இரத்தக் கல் (BLOOD STONE) மிகவும் ஏற்றது! மேலும GARNET எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
இவர்களுக்கு கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் மிகவும் ஏற்றவை! ஆனால் கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் துரதிர்ணடமானவை.
நண்பர்கள்
3, 6, 9 ஆகிய எண்களை உடைய அன்பர்கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள். 1ந்தேதி பிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான். 2, 8 எண்காரர்களின் நட்பையும், கூட்டையும் (றிணீக்ஷீtஸீமீக்ஷீsலீவீஜீ) தவிர்த்துவிட்டால், பல நஷ்டங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.
திருமணம்
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.
நோய்களின் விபரங்கள்
இவர்களது உடலில் ஏதாவது ஒரு நீண்டகாலப் பிணி இருக்கும். அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இவர்களுக்குப் பல் வலி, பற்களில் பூச்சி விழுதல் போன்றவை ஏற்படும். கால் ஆணித் தொந்தரவுகள், பாதங்களில் வலி, வெடிப்புக்கள் ஆகியவை ஏற்படும். மிகவும் உஷ்ண தேகிகளாதலால், இவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கலும், மூல உபத்திரவங்களும், வலியும், கண்களில் எரிச்சலும் ஏற்படும். பகலைவிட இரவில் உற்சாகமாக இருப்பார்கள். நீண்ட நேரம் இரவில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருப்பார்கள். இவர்கள் தினமும் நீராகாரம் பருகி வந்தால் மிகவும் நல்லது! உடல் சூட்டைத் தணிக்க நீராகாரம் சிறந்த பானமாகும்.
நெருப்புக் காயங்கள், விபத்துக்கள் ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் உண்டு. இரத்தக் கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் கெடுதல் ஆகியவைகளால் பாதிப்பும் உண்டு! கூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொள்ளக்கூடாது! இந்த எண்காரர்களின் உடம்பில் எப்படியும் ஆபரேஷன்கள் (ஏதாவது ஒரு காரணத்திற்காவது) செய்ய வேண்டி வரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 9 - பிறந்த தேதிப் பலன்கள், மிகவும், பிறந்த, நாட்களும், ஆகிய, இவர்களுக்கு, வரும், ஏற்படும், கூட்டு, நிறங்கள், திருமண, பலன்கள், அதிர்ஷ்ட, ஜோதிடம், உண்டு, தேதிப், ஏதாவது, வந்தால், ஆகியவை, அடிக்கடி, உடலில், இரவில், பாதிப்பும், ஆகியவைகளால், நீராகாரம், கொண்டோ, பெண்களையும், போன்றவை, இருப்பார்கள், தொந்தரவுகள், திருமணம், எண்கள், இவர்களுக்குப், ஒவ்வொரு, ஜோதிடம், எண், ஏற்றது, இரத்தக், வாழ்க்கை, அமையும், இவர்கள், எண்காரர்களின், அன்பர்கள், குழந்தை