பிறந்த எண் 9 - பிறந்த தேதிப் பலன்கள்

செவ்வாய் (Mars)
செயல் வீரர்களான 9ம் எண்காரர்களின் சிறப்புப் பலன்களைப் பார்ப்போம்.
எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன் சேர்ந்தாலும், தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்த எண்தான். 3 எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும். மீண்டும் கூட்டினால் (1+2) 3 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும்.
எனவே 9 எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத் தங்களின் இயல்பிறக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள்! இவர்கள் தீவிரமான மனப்போக்கும், தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள். எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன்படியே செயல்படுவார்கள். எத்துணைச் சோதனைகள் வந்தாலும், அவைகளைத் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள்! மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. தவறுகளைக் கண்டால் உடனே தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள்.
எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்க¬ளை நடத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டும். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும், அதிகாரமும் உண்டு! பயம் என்பது இருக்காது! செவ்வாய்க் கிரகம், தேவர்களுக்குத் தளபதியாவார். எனவே இவர்களுக்கச் சண்டையிடும் மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். இரத்தம், விபத்து, கொலை போன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். வேகம், சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண் இது! ஆற்றல், ஆசை, தலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்ற குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள். விரைவிலேயே ஒரு முடிவு எடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். பலருக்கு உடலில் காயங்களும், சிறு விபத்துக்களும் ஏற்படும். பெரும்பாலோர் போர் வீரர்கள், காவல் துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கடினமான துறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.
இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்! உணர்ச்சி வசப்பட்டவர்கள், பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சே இவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டு வந்துவிடும். பங்காளிச் சண்டை, மனைவி குடும்பத்தாருடன் சண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள்! பிறர் தங்களைக் குறை கூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது! சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக ஆற்றலும் உண்டு! அதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலை வாங்குவார்கள். இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள். இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். பலர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் ஆன்மீகத் தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்பு கொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்கள் இருக்கும். இவர்களுக்கு மனைவியின் வழி சொத்துக்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியமும் உண்டு. இவர்கள் கூர்மையான அறிவுடையவர்கள். எதிரிகளைச் சமயம் அறிந்து அவர்களை அழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடுவார்கள். இவ்வளவு இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள். தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள். தங்களது தொழிலில் மிகவும் உற்சாக உள்ளவர்கள்! தங்களது தொழிலை பெருகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலருக்கு அரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், இராணுவத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு.
தொழில்கள்
இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம் உடையவர்கள். மேலும் கட்டிடம் கட்டுதல், இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்த அமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வான இயல் துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான். அநீதிகளை எதிர்த்துப் போராடுவார்கள். இவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம். பலரை வைத்து வேலை வாங்கும் தலைவர்களாக, உயர் அதிகாரியாக, மேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள். இவர்கள் வீரம் மிகுந்தவர்கள், துப்பறியும் தொழில் ஒத்து வரும். கலைத் தொண்டிலும், உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள்! பொது மக்களுக்காகத் தியாகம் (உண்மையாகச்) செய்ய வல்லவர்கள். பிரபல வேட்டைக்£கரர்களாகவும், வனவிலங்குகளைத் திறமையாக அடக்கும் தொழிலும் நன்கு பிரகாசிப்பார்கள். கால் பந்தாட்டம், டென்னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன், வாலிபால், சைக்கிள் பந்தயம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்! சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள். இரயில், கார், லாரி ஆகியவை ஓட்டுநர்கள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றிலும் இவர்கள் தொழில் அமையும். இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்க! ஆயுதம் தாங்கிச் செய்யும் அனைத்துத் தொழிலும் வெற்றி பெறுவார்கள். இராணுவம், காவல் துறை, அறுவை மருத்துவர்கள் போன்றவைகளில் பிரகாசிப்பார்கள். கார், ரயில், விமானம், ஓட்டுவதில் நாட்டம் உள்ளவர்கள். வேகமாகச் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பொறுமை இவர்களுக்குப் பிடிக்காத விஷயம். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை, விவசாயத்துறையும் ஒத்து வரும். தீயுடனும், வெப்பத்துடனும் சேர்ந்த எந்தத் திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் பிரகாசிப்பார்கள். சிலர் கோபக்காரர்களாக மாறி தீய செயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.
பொறியியல் தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றி பெறுவார்கள். இரும்பு, எஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம் முன்னேறலாம். அச்சகத் தொழிலும் நன்கு அமையும். கட்டிடத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சு வேலை போன்ற தொழில்கள் அனைத்தும் வெற்றி தரும். விளையாட்டு வீரர்கள். மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும். ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும் தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.
குறிப்பு
இதுவரையிலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களுக்கான தொழில்களைப் பார்த்தோம். உங்களது பிறவி எண்ணுக்கோ, விதி எண்ணுக்கோ, பொருத்தமான தொழிலாக இருக்க வேண்டியது முக்கியம். பெயர் எண்ணிக்கான தொழிலிலும் ஓரளவு வெற்றி பெறலாம்.
எனது அனுபவத்தில் எண்கணிதப்படியான தொழில்களே இறுதியில் மனிதனுக்கு அமைகின்றன. நீங்கள் கோடீஸ்வரராவது என்பது சரியான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது என்பதால் மிகந்த கவனம் தேவை! எனவே ஒன்றுக்கு பல தடவை சிந்தித்து உங்களது தொழிலையோ, வியாபாரத்தையோ தொடங்குகள்! முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலிலும் ஈடுபடுங்கள்! தொழிலில் உங்களை நம்பி முழுமையாக ஈடுபட்டால், அதில் வெற்றி பெறலாம். கோடிகளைக் குவிக்கலாம்.
செவ்வாயின் யந்திரம் (சக்கரம்)
8 | 3 | 10 |
9 | 7 | 5 |
4 | 11 | 6 |
செவ்வாயின் மந்திரம்
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வத்யுத்காந்தி ஸமப்ரம் குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 9 - பிறந்த தேதிப் பலன்கள், இவர்கள், துறை, வெற்றி, உண்டு, பெறுவார்கள், மிகவும், பிறந்த, பலன்கள், பிரகாசிப்பார்கள், சக்தி, எதையும், தரும், கொள்வார்கள், காவல், இவர்களுக்கு, இருப்பார்கள், தொழில்கள், வேலை, வீரர்கள், சிறந்த, பலருக்கு, தங்களது, தொழிலும், கிடைக்கும், சிலர், ஜோதிடம், நன்கு, தேதிப், இராணுவம், துறையிலும், எண்ணுக்கோ, தொழிலிலும், பெறலாம், செவ்வாயின், ஒன்றுக்கு, உற்பத்தி, அறுவை, ஈடுபாடு, ஈடுபட்டால், வரும், ஒத்து, கார், உள்ளவர்கள், விளையாட்டு, தொழில், மின்சாரத், ஆகியவை, அமையும், பிடிக்கும், புகழ், உங்களது, சண்டை, அவர்களை, மற்ற, தீவிரமான, திட்டமிட்டு, உடனே, வந்தாலும், மீண்டும், எண்ணுடன், ஜோதிடம், எண், சிறப்புப், எண்தான், எந்த, தட்டிக், எப்போதும், தாங்கிக், இவர்களுக்குப், பலர், கொடுப்பார்கள், முழுமையாக, ஈடுபடுவார்கள், பெரும்பாலோர், மாட்டார்கள், என்பது, இவர்களது, வேகம், போர், இருக்கும், தொழிலில்