ஆரூடப் பாடல் - 6, 3, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

அந்தோவுன் கிரகமெல்லாம் ஆச்சுதுநீசமாக சந்தோஷம் மழியாமலாகும் தனித்தாறு மிருமுன்றுமானால் நிந்தைகள் மிகவுண்டாகும் நிஷ்கடூரக்காரனாகும் வந்தநோய் வைத்தங்காட்டும் வலிசண்டை பலவுண்டாமே. |
பாய்ச்சிகை உருட்டலில் முதலில் ஆறும் அடுத்தடுத்து இரு முறை மூன்றும் விழுந்திருப்பது உனக்கு கெடுதலையே தரும். அவப் பெயரையும், குடும்பத்தினர் ஆதரவை இழக்கவும் வைக்கும். வலுச் சண்டைகளும், நோயினால் கடுமையாக பாதிக்கப் படும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 3, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், பாய்ச்சிகை, ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், ஆரூடப், ஸ்ரீஅகத்தியர், பாடல்