ஜோதிடப் பாடம் – 5 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு இலக்கினம் எனப்படும். என்ன புரிகிறதுவும் போல் இருக்கிறது; அதே சமயம் புரியாதது போலும் இருக்கிறது. இல்லையா. இன்னும் விளக்கமாகச்சொல்லுகின்றோம். பூமியை மேலிருந்து கீழாகப் 12 பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 12-பகுதிக்கும் மேஷத்திலிருந்து, மீனம் முடிய 12 ராசிகளின் பெயர்களைக் கொடுங்கள். அதாவது பூமியைப் 12 ராசிகளாகப் பிரித்து விட்ட்டோம்.
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்தில் ரிஷபத்தில் உதயமாவர். கீழே சூரியன் எந்ததெந்த மாதத்தில் எந்த ராசியில் உதயம் ஆவார் எனப்பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறோம்.
.
மாதம் | சூரியன் உதயமாகும் ராசி |
சித்திரை | மேஷம் |
வைகாசி | ரிஷபம் |
ஆனி | மிதுனம் |
ஆடி | கடகம் |
ஆவணி | சிம்மம் |
புரட்டாசி | கன்னி |
ஐப்பசி | துலாம் |
கார்த்திகை | விருச்சிகம் |
மார்கழி | தனுசு |
தை | மகரம் |
மாசி | கும்பம் |
பங்குனி | மீனம் |
இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார். சூரியன் சித்தரையில் மேஷத்தில் உதயமாவதால் அதற்கு மேஷமாதம் என்று பெயர். வைகாசியில் ரிஷபத்தில் உதயமாவதால் அதற்கு ரிஷப மாதம், என்று பெயர். இவ்வாறே மிதுனமாதம், கடக மாதம், சிம்ம மாதம், கன்னியா மாதம், துலா மாதம், விருச்சிக மாதம், தனுர் மாதம், மகர மாதம், கும்ப மாதம், மீன மாதம் என்று ஒவ்வொரு மதமும் அழைக்கப்படும்.
அடுத்த பாடத்தில் இலக்கினம் எப்படிக் கணிப்பது எனப் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 5 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, மாதம், சூரியன், ஜோதிடப், உதயம், ஒவ்வொரு, மாதத்தில், ஜோதிடம், பாடம், நீங்களும், ஜோதிடர், ஆகலாம், ரிஷபத்தில், ராசியில், அதற்கு, பெயர், வைகாசி, உதயமாவதால், இருக்கிறது, நேரத்திற்கு, பூமியின், பாடங்கள், இலக்கினம், மீனம், மேஷத்தில், சித்திரை, உதயமாவர்