ஜோதிடப் பாடம் – 49 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இந்த ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருக்கிறது. இதில் இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும். ஒரு ராசிக்கு முப்பது பாகைகள் அல்லவா? இந்த முப்பது பாகையில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரம் என்ன? மேற்படி ஜாதகத்தில் சந்திரன் பூசம் முதல் பாதத்தில் இருக்கிறார். சனி பூசம் 2-ம் பாதத்தில் இருக்கிறார். ஆக இருவரும் மிக நெருக்கமாகத்தான் உள்ளனர். நெருக்கம் அதிகமாக இருக்க இருக்க இந்த தோஷத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதே ஜாதகத்தில் சனி ஆயில்யம் 4-ம் பாதத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். இருவருக்கும் உள்ள தூரம் அதிகமாக இருக்கிறது. அப்போது இந்த தோஷத்தின் தாக்கம் இவ்வளவு அதிகமாக இருக்காது. பொதுவாக இருகிரகங்களுக்கு இடையில் உள்ள தூரம் 13 பாகைகளுக்குள் இருந்தால் Conjunction என்று சொல்லப்படுகிற பார்வையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மற்றொரு ஜாதகத்தைப் பார்ப்போம். இது ஒரு பெண்ணின் ஜாதகம். இவர் படித்து மத்திய அரசில் வேலை பார்த்தும் திருமணம் கைகூடி வரவில்லை. பல ஆண்டுகள் ஜாதகங்கள் பார்த்த பின்னர் 29-ம் வயதில்தான் திருமணம் நடந்தது. அதாவது திருமணம் ஆனால் போதும் என்ற விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டபின்தான் இவருக்குத் திருமணம் நடந்தது. இவருக்கு இலக்கினத்தில் சனி, சந்திரன், ராகு. இவர் ஜாதகத்தில் இலக்கினமும் சந்திரனும், சனி, ராகு சேர்க்கையால் கெட்டு விட்டனர். 7-ம் வீட்டிற்கு சனியின் பார்வை வேறு. இக்காரணங்களால் இவர் திருமணம் மிக தள்ளிப்போயிற்று.

தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 49 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், அதிகமாக, திருமணம், ஜாதகத்தில், பாதத்தில், இருக்கிறார், தாக்கம், உள்ள, இவர், தூரம், ஜோதிடர், நீங்களும், பாடம், ஜோதிடம், ஆகலாம், சந்திரனும், இருக்கிறது, நடந்தது, ராகு, இருக்கும், சந்திரன், பாடங்கள், முப்பது, இருக்க, தோஷத்தின், பூசம்