ஜோதிடப் பாடம் – 48 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இவ்வாறாகப் பொருத்தத்திற்கும் இவர்கள் வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லாது இருக்கிறது பாருங்கள். சரி! இவர்கள் ஜாதகத்தைச் சற்றுப் பார்ப்போம்.
பெண்ணுக்கு இலக்கினத்தில் 6-ம் வீட்டிற்குடைய குரு இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்க்கிறார் அல்லவா? 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் அல்லவா? ஆக இருவருக்கும் எப்போதும் சண்டை. மனக் கசப்பு. விவாக ரத்து ஒன்றுதான் ஆகவில்லை. பல தடவை அவர் நான் விவாக ரத்துச் செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டார். பெண்ணுக்கு இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டின் அதிபதியும் பரிவர்த்தனை. 6-ம் வீடும் இலக்கினமும் சம்மந்தப் பட்டால் உடல் வியாதிதான் என்று நாம் எழுதி வந்திருக்கிறோம். அதன்படி இந்தப் பெண் உடல்நலம், மன நலம் கெட்டு வாழ்கிறார். பொதுவாக இலக்கினத்தில் ராகு இருக்கும் பெண்கள் அடங்கி நடப்பது இல்லை. இப் பெண்ணும் இதற்கு விதி விலக்கு இல்லை. ஜாதகத்தில் இவ்வளவு குறைபாடுகள் இருக்கும்போது வெறும் தசப் பொருத்தம் மட்டும் பார்த்து இணைப்பது சரியல்லவே
!
நாம் தசப்பொருத்தங்களைப் பற்றிக் குறை கூறுவதாக யாரும் எண்ன வேண்டாம். அடிப்படை ஜாதகங்களிலேயே குறைபாடுகள் இருக்குமேயானால் அந்த ஜாதகங்களைப் 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்த்து இணைப்பதில் பொருள் எதுவும் இல்லை என்பதுதான் நமது வாதம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 48 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், பொருத்தம், இல்லை, ஜோதிடம், ஆகலாம், பாடம், நீங்களும், ஜோதிடர், பாக்கியம், அல்லவா, விவாக, நாம், மட்டும், பார்த்து, அவர், குறைபாடுகள், இருக்கும், மாகேந்திரப், பாடங்கள், இந்தப், வேண்டாம், பெண்ணுக்கு, இவர்கள், இலக்கினத்தில்